Saturday 21 December 2013

லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பேரணி : தில்லி சிவந்தது!


நாடு முழுதுமிருந்து செங்கொடி ஏந்திய வண்ணம் திரளாகத் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தால் புதுதில்லி சிவந்தது.

சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்திய தொழிற் சங்கங்களும், மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள், வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் சம்மேளனங்கள் விடுத்த அறைகூவலுக்கிணங்க பல லட்சக்கணக்கான தொழிலாளர்களும் ஊழியர்களும் தில்லி ராம் லீலா மைதானத்திலிருந்து நாடாளு மன்ற வீதி நோக்கி நடத்திய பிரம்மாண்ட மான பேரணியால் தில்லி சிவந்தது. நாடு முழுதும் இருந்து தொழி லாளர்கள் டிசம்பர் 8இலிருந்தே தில்லியை முற்றுகையிடத் தொடங்கி விட்டனர்.

தில்லி, நாடாளுமன்ற வீதியினருகே அமைந்துள்ள ஜந்தர் மந்தரில் 9ஆம் தேதியிலிருந்தே பல்வேறு சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தர்ணா போராட்டங்கள் நடைபெறத் துவங்கிவிட்டன. வங்கி ஊழியர் சங்கங்கள், கிராமிய வங்கி ஊழியர்கள், அஞ்சல் துறை ஊழியர்கள் ஆகியோர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். தமிழகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான தோழர்கள் அஞ்சல் மூன்றின் மாநில செயலர் JR தலைமையில் கலந்து கொண்டனர். கூடுதலாக புதுச்சேரி, ஆங்கிலோ பிரெஞ்சு தொழிலாளர்களும் தங் கள் ஆலை நவீனப்படுத்தப்பட வேண் டும் என்று முழக்கமிட்டார்கள். நாடு முழுதும் பணியாற்றும் மின் துறை ஊழியர்களும் எரிசக்தி உரிமைமனித உரிமை என்பதை வலியுறுத்தி சிறப்பு மாநாடு நடத்தினார் கள்.

அதேபோன்று தலித்/பழங்குடியினருக்கான பட்ஜெட் ஒதுக்கீடு களின்போது அவர்களுடைய மக்கள் தொகை விகிதாசாரத்திற்கேற்ப துணைத் திட்டத்தின்கீழ் பட்ஜெட் செலவினங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இன்று (வியாழன்) அன்று நடை பெற்ற பேரணியில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச, எச்எம்எஸ், யுடியுசி உட்பட அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்கள் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களும், மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்களின் ஊழியர்களும், அங்கன்வாடி ஊழியர்களும், இன்சூரன்ஸ் மற்றும் வங்கிஊழியர்களும் ஆண்களும் - பெண்களும் பல லட்சம் பேர் பங்கேற்றார்கள்.

பேரணியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, வட கிழக்கு மாநிலங்கள் உட்பட நாட் டின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்ததொழிலாளர்களையும் பார்க்கமுடிந்தது. குறிப்பாக பாதுகாப்புத் துறை, தணிக்கை மற்றும் கணக்குத் துறை, சுங்கத்துறை, உருக்குத் தொழிலாளர்கள், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், ரயில்வே மற்றும் டெலிகாம் ஊழியர்கள் முழுமையாக இப்பேரணியில் பங்கேற்றதைப் பார்க்க முடிந்தது. அதுமட்டுமல்ல, ஆட்டோமோபைல்ஸ், டெக்ஸ்டைல், எலக்ட்ரானிக்ஸ், விளையாட்டுப் பொருள்கள், ஆடை தயாரிப்பு நிறுவ னங்கள் என தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் பெருவாரியாக இப்பேரணியில் பங்கேற்றனர். அரசு மற்றும் பொதுத் துறையில் பணியாற்றும் போக்கு வரத்து ஊழியர்கள் மட்டுமல்ல,

தனியார்துறையில் பணி யாற்றும் போக்குவரத்து ஊழி யர்களும் இப்பேரணியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று அரசின் பல்வேறு திட்டப் பணிகளில் பணியாற்றும் `ஆஷா’, அங்கன்வாடி மற்றும் சத்துணவுக் கூடங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களும், தேசியக் குழந் தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களும், கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டு வேலைசெய்யும் பெண் தொழிலாளர் கள் என சகல பகுதி தொழி லாளர்களும் முழுமையாக இப்பேரணியில் பங்கேற்றார்கள்.  ஆட்டோ தொழிலாளர்கள், மீனவர்கள், கிராம ஊழியர்கள், தோட்டத்தொழிலாளர்கள் என்று முறைசாராத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து வகையான தொழிலாளர்களும் இப்பேரணியில் பங்கேற்றதையும் பார்க்க முடிந்தது. இதற்குமுன்பெல்லாம் தொழிலாளர் பேரணி என்றால் ஏஐடியுசி மற்றும் சிஐடியு போன்ற இடதுசாரி சங்கங்களின் செங்கொடிகளைத்தான் காண முடியும். ஆனால் இப்பேரணியில் சிவப்பு மட்டுமல்ல, மூவர்ணக் கொடிகளும், காவிக்கொடிகளும், நீலநிறக் கொடி களும் என அனைத்துத்தரப்பு சங்கங்களைச் சேர்ந்த கொடி களையும் பார்க்க முடிந்தது.

இன்றைய பேரணியில் கணிச மான அளவிற்குப் பெண்கள் பங்கேற்றதையும் பார்க்க முடிந்தது. அனைவரும் தங்கள் கலாச்சாரத்திற்கேற்ப தங்கள் மாநிலத்தின் மொழிகளில் ஆடல் பாடல்களுடன் முழக்கமிட்ட வண்ணம் பேரணியில் வந்தனர். பொதுவாகவே டிசம்பரில் தில்லியில் குளிர் மக்களை நடுங்க வைத்துவிடும். ஆயினும் ஆட்சியாளர்களின் மக்கள் விரோதக் கொள்கைகளின் விளைவாக, கடந்த பல ஆண்டுகளாகவே சம்பளம் உயரவே இல்லை, ஆனால் விலைவாசி மட்டும் விண் ணை நோக்கி உயர்ந்து சென்று விட்டது. விஷம்போல் ஏறி யுள்ள விலைவாசியைக் கணக்கில் எடுத்துக்கொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க அரசு தயாராக இல்லை. இதனால் ஆவேசம் அடைந்து, கோபாவேசத்துடன் வீர முழக்கமிட்டு வந்த தொழி லாளர்களின் முன், தில்லி குளிரால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.

பேரணியில் வந்தோர்,``குறைந்தபட்ச ஊதியம் பத்தாயிரம் ரூபாய் ஏன் வழங்க வில்லை?’’, “சமூக நலத் திட்டங்களை ஏன் அமல்படுத்த வில்லை’’, “மாருதியில் பணி யாற்றிய ஊழியர்கள் 150 பேரை ஏன் இன்னமும் சிறையிலேயே அடைத்திருக்கிறீர்கள்?’’ “அதே சமயத்தில் தொழிலாளர் நலச் சட்டங்களை மீறும் முதலாளி ஒருவரைக்கூட ஏன் தண்டிக்கவில்லை?’’ என்று தொழிலாளர்கள் பேரணியில் எழுப்பிவந்த முழக்கங்களுக்கு ஆட்சியாளர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என் பதே கேள்வி.

பேரணியின் நிறைவாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சார்பில் ஏ.கே.பத்மனாபன், தபன்சென், ஏஐடியுசி சார் பில் குருதாஸ் தாஸ்குப்தா, யுடியுசி சார்பில் அபனி ராய், தொமுச சார்பில் நடராஜன், எம். சண்முகம் முதலானோர் உரையாற்றினார்கள். உரையாற்றிய அனைவருமே தொழிலாளர்களின் இத்தகு மகத்தான ஒற்றுமையை எதிர் காலத்திலும் கட்டிக்காப்போம் என்று உறுதி அளித்தார்கள். தொழிலாளர்களின் இத்தகைய ஒற்றுமைதான் இன்றையதினம் பிரதமரை போராட்டக்குழுத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அமர வைத்திருக் கிறது என்றும் கூறினார்கள்.

தொழிலாளர்கள் அனைவரும் சங்கவித்தியாசமின்றி ஒன்று பட்டு நின்ற வேண்டும் என்றும் இத்தகு ஒற்றுமையை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.பின்னர் அனைத்து சங்கங்களையும் சேர்ந்த தலைவர் களின் குழு ஒன்று அமைச்சர வைக்குழுத் தலைவரான ஏ.கே. அந்தோணியை மாலை 3.30 மணியளவிலும் பின்னர் பிரதமரை 4.30 மணியளவிலும் சந்தித்து, தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்தினார்கள்.
S.ASHOKAN
BRANCH SECRETARY

No comments:

Post a Comment